01/08/2023 அன்று ஈரோடு கீழ் பவானி வடிநிலக்கோட்ட செயற் பொறியாளர் அவர்களிடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்கக் கோரி கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டன. மேலும் இதுவரை நடந்துள்ள சீரமைப்பு வேலைகளின் நிலை அறிக்கையும் பெறப்பட்டது. அத்தோடு எக்காரணம் கொண்டும் சீரமைப்பு வேலைகளில் விருப்பம் போல வடிவமைப்புகளை மாற்றக்கூடாது என செயற்பொறியாளரிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் நடைபெற்று வரும் வேலைகளில் பின்பற்றப்பட்டுள்ள நடைமுறைகள் குறித்த விபர அறிக்கையும் கோரப்பட்டுள்ளது மிக விரைவில் கொடுப்பதாக செயற்பொறியாளர் அவர்கள் உறுதியளித்துள்ளார்கள்.

Updated: