கீழ்பவானி பிரதான கால்வாய் மைல் 35/6 என்ற இடத்தில் உள்ள அவசர கால நீர் போக்கியை உடைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்டது. அடுத்து பிரதான கால்வாய் மைல் 40-5 என்ற இடத்தில் பிரதான கால்வாயில் கரையின் பக்க சுவரை உடைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்டது ஆகிய இரண்டு குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து இன்று (07-09-2023) ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமும் ஆயக்கட்டு விவசாயிகள் அமைப்புகளின் சார்பாக புகார் கொடுக்கப்பட்டது. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேரில் வலியுறுத்தி சொல்லப்பட்டது.
செய்தி
###
புகைப்படங்கள்