கீழ்பவானி ஊஞ்சலூர் வாய்க்கால் 16-7

இப்படி ஒரு செய்தி வாட்ஸ் அப் மூலம் வந்தது உடனடியாக இவ்வாறு காணொளி வெளியேற்ற நபர் அந்தப் பகுதியைச் சார்ந்த சரவணன் என்பது கண்டறியப்பட்டுள்ளது. நீர்வளத் துறை அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்துவிட்டு தற்போது திட்டமிட்டபடி ஊஞ்சலூர் பகிர்மானக் கால்வாயில் மைல் 16-7ல் பக்கச் சுவர் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர். இதுபோல் வேலையை தடுப்பதற்கான முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். எனவே இது போல எந்த இடத்தில் பழைய வேலை புதிய வேலை என்று சொல்லி வேலையை தடுக்கின்றவர்களை புகைப்பட ஆதாரத்தோடு முழு முகவரியோடு தெரிவிக்க வேண்டுகிறோம்.

அனைத்து வேலைகளையும் செய்வதற்கு மே -8 ஆம் தேதி நீர்வளத்துறை ஒரு திட்ட அறிக்கையை முன்னாள் அமைச்சர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ஆர் எம் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நமது போராட்ட குழுவிடம் கொடுத்துள்ளனர் அந்தத் திட்டத்தில் கண்டுள்ளபடி வேலைகள் நடைபெறுகின்றதா என்பதை நாம் கண்காணிக்க வேண்டும்.

கி.வே.பொன்னையன் செயலாளர் கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க

Tags:

Updated: