கள் இயக்கத் தலைவர் என்று அறியப்படும் கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அரச்சலூர் நல்லசாமி அவர்கள் அரசாணை எண் 276 ஐ செயல்படுத்தும் மாண்புமிகு தமிழக முதல்வரையும் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சரையும் பதவி விலக வேண்டும் என்று ஊடகங்களில் நேர்காணல் கொடுத்துள்ளார்.

நல்லசாமி அவர்கள் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். அரசாணை எண் :276 ஐ செயல்படுத்த வேண்டும் என்று மாண்பமை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு 31/03 /2023 அன்று ஆணையிட்டுள்ளது. சட்டப்படி நிறுவப்பட்ட அரசின் பொறுப்பில் இருக்கின்ற முதல்வர் அவர்களும் நீர்வளத்துறை அமைச்சர் அவர்களும் உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கு கட்டுப்பட்டவர்கள் என்பது கூடவா வழக்கறிஞரான நல்ல சாமிக்கு தெரியாது! மேலும் இந்த அரசாணை:276 மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சி காலத்தில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் கால்வாய்கள் உள்ளிட்ட பவானி பாசனம் முழுவதற்கும் 933 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட சீரமைப்பு திட்டத்திற்கானதாகும் . ஆறு சிப்பங்களாக (Backages)வேலைகள் பிரிக்கப்பட்டு அதிலே இரண்டு சிற்பங்கள் கொடிவேரி பாசனத்திற்கும் காளிங்கராயன் பாசனத்திற்கும் நாலு சிற்பங்கள் கீழ் பவானி பிரதான கால்வாய்க்கும் என்று அரசாணை:276 ல் உள்ளது . அதன்படி காளிங்கராயன், கொடிவேரி பாசனத்தின் சீரமைப்பு வேலைகள் 100 % நிறைவேறிவிட்டது . கீழ் பவானி பாசனத்திலும் 13% வேலைகள் நிறைவேறியுள்ளது. இவைகளை எல்லாம் கணக்கில் கொண்டு மாண்பமை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்புரையில் மிகத் தெளிவாக “அரசாணை எண் 276 மோகனகிருஷ்ணன் தலைமையிலான ஏழு வல்லுனர்களின் பரிந்துரைப்படி போடப்பட்ட ஒரு திட்டமாகும். எனவே அதில் நீதிமன்றமே தலையிடாது” என்று தெளிவாகச் சொன்னதை கள் நல்ல சாமி காணத்தவறியது ஏன்? மனம் போன போக்கில் நல்லசாமி போன்றவர்கள் பேசிக் கொண்டிருப்பது அவர் கற்ற கல்விக்கு அழகல்ல.

வாய் புளித்ததோ ,மாங்காய் புளித்ததோ என்று நல்லசாமி அவர்கள் பேசுகிறார். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் , மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்களையும் பதவி விலகக் கோரி இருக்கும் நல்லசாமி அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். நல்லசாமி அவர்கள் தனது படிப்பையும் பொறுப்பையும் உணர்ந்து பேச வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்த விரும்புகிறோம்.

கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் ஜம் சங்கம் கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் சங்கம். 21/03/2023

புகைப்படங்கள்

Tags:

Updated: