பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணித் தலைவர் ஜி .கே. நாகராஜன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொருளாளர் செங்கோட்டு வேலுமணி வழக்கறிஞர்மூலம் அறிக்கை அனுப்பினார் பாரதிய ஜனதா கட்சியின் விவசாயிகள் அணி மாநிலத் தலைவராக இருப்பவர் ஜி கே நாகராஜன். இந்த ஜி கே நாகராஜன் அவர்கள் கீழ் பவானி சீரமைப்பு பணிகள் குறித்து எந்தவிதமான விபரங்களையும் பகுதி விவசாயிகள் அமைப்புகளிடமோ பாரதிய ஜனதா கட்சியின் விவசாயிகள் அமைப்புகளின் தலைவர்களிடமோ கேட்காமல் மனம் போன போக்கில் அறிக்கைகளை விடுத்து வந்தார். 31/03/2023 சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு அரசாணை எண் :276 இன் படி வேலைகள் செய்ய ஆணையிட்டது . இந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை கோவையில் இருந்த ஜி கே நாகராஜன் அவர்களுக்கு கீழ் பவானிமுறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வாட்ஸ் அப் மூலம் அனுப்பியும் வைத்தோம் . அந்தத் தீர்ப்பு உரையை படித்துவிட்டு நாகராஜன் அவர்கள் தன் மனம் போன போக்கில் விளக்கம் அளித்து தீர்ப்புக்கு எதிராக மக்களை தூண்டி விடுகிற வேலையில் ஈடுபட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்வோம்! சீரமைப்பு வேலை செய்வதை தடுத்து நிறுத்துவோம்! என்றெல்லாம் மக்கள் நடுவில் பேசினார் . பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் பொருளாளரும் சிவகிரி பகுதி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினருமான செங்கோட்டு வேலுமணி அவர்கள் இந்த பிரச்சனையை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி கே சரஸ்வதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அத்தோடு தனது வழக்கறிஞர் மூலமாக ஜி கே நாகராஜன் அவர்கள் மீது உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து தீர்ப்புக்கு எதிராக மக்களை தூண்டிவிடுகிற வேலையை செய்ததற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான அறிவிப்பினை வழக்கறிஞர் மூலம் அனுப்பியுள்ளார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதிப்பிற்குரிய தங்கவேல் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் விவசாயிகள் அணி மாநில தலைவர் ஜிகே நாகராஜன் அவர்களுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது