அனுப்புநர் : அ. செங்கோட்டு வேலுமணி W.P.NO:19548/2022 செயலாளர் எல் 5 கீழ்பவானி முறைய நீர் பாசன விவசாயிகள் சபை பதிவு எண்:46/1994 காரவலசு வாழைத் தோட்டம் (அஞ்சல்) சிவகிரி.638109 ஈரோடு (மாவட்டம்) பெறுநர் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஈரோடு. பொருள்: கீழ் பவானி சீரமைப்பு வேலைகள் முடக்குவதற்கு நடக்கும் சதி வேலைகளை நடவடிக்கை எடுத்து ஒழுங்கு செய்ய வேண்டுதல் கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகள் மாண்பமை உயர்நீதிமன்றத்தின் 31 3 2023 தீர்ப்புக்கு இணங்க நடந்து வருகிறது.

மாண்பமை உயர்நீதிமன்றம் அரசாணை எண் 276 ஐ ரத்து செய்யக்கோரி மு.ரவி அவர்கள் தாக்கல் செய்த(W.P.No:10419/2021) வழக்கை அரசுக்கு முறையிட வழிகாட்டி அதன் அடிப்படையில் அரசும் உரிய பதிலை அளித்துள்ளது. (தீர்ப்பு உரை ஆங்கிலம் பக்கம் 13)

எனவே அரசாணை எண் 276 ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முறையாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அதை எழுப்ப முடியாது. என தனது தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது. எனவே தற்போது எழுப்புகிற கோரிக்கைகளுக்கெல்லாம் நீர்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் சந்தீப் சேக்சியானா அவர்கள் மிக விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். அந்த விளக்கங்களை உயர்நீதிமன்றம் சரியானது என ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில் சட்டரீதியாக முடித்து வைக்கப்பட்ட ஒரு பிரச்சனையை மீண்டும் எழுப்பி சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் சில சுயநல சக்திகள் ஈடுபட்டுள்ளனர். 15 /05 /2023 அன்று நைனாமலை என்பவர் தலைமையில் அரச்சலூர் கவி மகாலில் நடைபெற்ற கூட்டத்தில் 22 /05 /2023 அன்று சீரமைப்பு வேலைகளை செய்யக்கூடாது என அரச்சலூரில் கடையடைப்பு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இது உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நடவடிக்கையாகும்.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

இப்படிக்கு,

அ.செங்கோட்டு வேலுமணி WP.19548/2022 மனுதாரர். செயலாளர் L5 கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் சபை பதிவு எண்:46/1994

16/05/2023

புகைப்படங்கள்

Tags:

Updated: