கீழ் பவானி சீரமைப்பு வேலைகளை சீர்குலைக்க
பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநிலத் தலைவர்
ஜி.கே நாகராஜன் வகுக்கும் திட்டத்தை அம்பலப்படுத்தும் காணொளி.
உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு 31/03/2023 அன்று வழங்கிய தீர்ப்பின்படி 03 /05 /2023 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் சீரமைப்பு வஏலைகளுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. கார்த்திகேய சிவ சேனாபதியை முதல்வர் அவர்களே நேரில் அழைத்து உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படக் கூடாது என அறிவுறுத்தி இருக்கின்றார் . முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலை ஏற்று கார்த்திகேய சிவ சேனாபதி அவர்கள் வெளிப்படையாகவே தான் இனி திட்ட எதிர்ப்பு வேலைகளில் ஈடுபடுவதில்லை என அறிவித்துள்ளார். 11/05/2023 திறமைப்புத் திட்ட எதிர்ப்பாளர்களின் கூட்டத்தை நடத்தி அனைவரையும் திட்ட செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்குவது என தீர்மானம் நிறைவேற்றி முதல்வருக்கு அனுப்பியும் உள்ளார். கீழ்பவானி சீரமைப்பு வேலைகளுக்கான பணியானை கீழ்பவானி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் கண்ணன் அவர்களால் 08 /05/ 2023 அன்று வழங்கப்பட்டது. வேலைக்கான காலம் தொண்ணூறு நாட்கள் என்பதால் மிகத் துரிதமாக வேலைகள் நடந்து வருகிறது . இந்த வேலைகளை சீர்குலைக்க வேண்டும் என்ற அரசியல் நோக்கத்தோடு பாரதிய ஜனதா கட்சியின் விவசாயிகள் அணிமாநிலத் தலைவர் நாகராஜன் அவர்கள் தனது கட்சியினரை வைத்து நடத்திய கூட்டத்தில் பேசிய விவரங்கள் இந்தக் காணொளியில் வெளி வருகிறது. மிக வெளிப்படையாக திமுகவின் கார்த்திகேயசிவ சேனாபதிக்கும் தனக்குமான முரண்பாட்டை கீழ்பவானி சீரமைப்பு வேலைகளின் மூலம் செயல்படுத்த ஜி கே நாகராஜன் வியூகம் வகிக்கிறார்.
நமது கேள்வி கீழ் பவானி பாசன திட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிற மொடக்குறிச்சி தொகுதியில் ஊஞ்சலூர், சென்னசமுத்திரம் கடைமடைப் பகுதிகளில் அந்த விவசாயிகள் தண்ணீர் இன்றி ஆண்டுதோறும் அல்லல் படுவது பாஜகசட்டமன்ற உறுப்பினருக்கு தெரியுமா?
பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றிருக்கிற மொடக்குறிச்சி தொகுதியில் தான் சீரமைப்பு வேலைகளுக்கான மக்கள் தளமே உள்ளது. சிவகிரியில் இருந்து தான் சீரமைப்பு வேலைகளுக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு மக்கள் திரள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனது சொந்த நலனுக்காக மொடக்குறிச்சி தொகுதியில் இருக்கின்ற பாசன விவசாயிகளில் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த விவசாயிகளின் கருத்தைக் கூட கேட்காமல் நாகராஜன் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார் . கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் பொருளாளர் செங்கோட்டு வேலுமணி அவர்களே பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்களில் ஒருவர் . இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக செயல்படும் பரணி ஏஜென்சீஸ் இராதாகிருஷ்ணன் அவர்களும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி செயல் வீரர் . இவர்களைப் போன்றவர்களின் கருத்துக்களையெல்லாம் என்னவென்றே கேட்காமல் ஜி.கே.நாகராஜன் தன் மனம் போல செயல்படுவது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் கேடாய் முடியும் என்பதை சொல்லி வைக்கின்றோம்.
ஜி.கே.நாகராஜன் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வெளிப்படையாக செயல்படுவாரேயானால் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கீழ் பவானி ஆயக்கட்டு விவசாயிகள் அணி திரண்டு போராடுவது தவிர்க்க முடியாது பாரதிய ஜனதா கட்சி இது போன்ற இரு வேறுபட்ட கருத்துள்ள நிலையில் பிரச்சனைகளில் சட்டத்தின் பக்கமும் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பக்கமும் நிற்பது தான் ஆட்சி செய்கின்றவர்களுக்கு அழகாகும் .
கி.வே..பொன்னையன் செயலாளர் கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் 14/05/2023