முக்கிய அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம் . உயர் நீதிமன்ற ஆணைக்கு இணங்க அரசாணை எண் :276 இன் கீழ் சீரமைப்பு வேலைகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து நமது கூட்டமைப்பின் துணைத் தலைவரும், செயலாளரும் மே -8ஆம் தேதி முதல் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணா நிலை போராட்டம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர்.
நேற்று(05/05/2023) செயற்பொறியாளர் அவர்கள் நமது தரப்பை அழைத்து நமது கோரிக்கைகளைக் கேட்டார் . இன்று (06/05/23)நமது குழுவிடம் அமைச்சர் முத்துசாமி அவர்களின் கலந்த ஆலோசனையின் படி இறுதி செய்யப்பட்ட முழுமையான விரிவான வேலைக்கான பட்டியல் ஒன்றும் நீர்வளத்துறையால் வழங்கப்பட்டது. அந்தப் பட்டியலில், ஏற்கனவே நாம் ஏற்றுக் கொண்டிருந்த அமைச்சரால் முன்வைக்கப்பட்ட திட்டம் இருப்பதாகவே உணர்ந்தோம்.
ஆனாலும் அரசு தரப்பில் இருந்து முறையாக அவர்களால் வழங்கப்பட்ட முன்மொழிவு திட்டத்தை இறுதி செய்து நம்மிடம் ஆவணப்படுத்திக் கொடுப்பதற்கு தயாரான நிலை இல்லை என்பதாகவே தெரிகிறது.
.அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான சரியான அறிவிப்பும் செய்யப்படவில்லை. எனவே அனைத்து பாசன சபை பொறுப்பாளர்களும், ஆயக்கட்டு நில உரிமையாளர் சங்க பொறுப்பாளர்களும் தங்கள் பகுதியில் இருந்து மிக அதிகமான மக்களை மே -8ஆம் தேதி திங்கட்கிழமை செயற்பொறியாளர் அலுவலகம் நோக்கி திரட்டி வர வேண்டுகிறோம். இந்தப் பிரச்சனையில் உண்ணா நிலை போராட்டம் மேற்கொள்கிற நமது தலைவர்களுக்கு உறுதுணையாக நாம் நிற்போம் என்பதை அரசுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . இந்த அமைப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மிக மூத்த வயதினரான துணைத்தலைவர் இராமசாமி(85) அவர்களும் 60 வயதைக் கடந்த செயலாளர் ஈஸ்வரமூர்த்தி அவர்களும் காலவரையற்ற உண்ணா நிலை போராட்டம் மேற்கொள்வது மிகப்பெரிய துணிச்சல் மிக்க முடிவாகும். நமது இலட்சியத்தை அடைவதற்காக தங்களை வருத்திக் கொள்கிற அந்த தலைவர்களின் பக்கம் நான் நிற்கின்றோம் என்பதை அரசுக்கு எடுத்துக்காட்டுவதற்கு ஆர்த்தெழுந்து வாருங்கள். நம்மோடு கைகோர்த்து நிற்பதற்கு பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முன்னாள் அமைச்சர்களும் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் பல்வேறு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களும் முன்வந்துள்ளனர்.
இன்னும் நமக்கு ஆதரவு தெரிவித்து சென்னை தலைநகரில் இருந்து பல்வேறு அமைப்பின் தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
அநீதியை முறியடிப்போம் ! நீதியைப் பாதுகாப்போம்!
அன்போடு அழைக்கும்…
எஸ் .பெரியசாமி தலைவர், கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம்.
செங்கோட்டு வேலுமணி பொருளாளர் கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு.
சுப்பு மாவட்ட செயலாளர் தமிழக விவசாயிகள் சங்கம். 06/05/2023