இன்று (27/04/2023)கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பும், கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர் சங்கமும் இணைந்து காலையில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் மாலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் மே -1 ஆம்தேதி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க அரசாணை எண் 276 இன் படி வேலைகள் தொடங்கவும் வேண்டி மனு கொடுத்தோம். இரு இடங்களிலும் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் “சீரமைப்பு வேலைகள் அனைத்தும் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி அரசாணை எண் :276 இல் கொடுக்கப்பட்டுள்ள திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும். இதில் ஏதாவது மாற்றங்கள் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பது என்றும் அவ்வாறு மாற்றம் செய்து வேலை செய்கிற நீர்வளத் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளதை அறிவித்துள்ளோம். ஆளுங்கட்சியைச் சேர்ந்த மாநில பிரமுகர் ஒருவரே முன் நின்று அரசாணை எண்: 276 முடக்குவதற்கு பிரச்சாரம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்தோம்.

கி.வே.பொன்னையன்

ஒருங்கிணைப்பு குழுவிற்காக 27/04/2023

புகைப்படங்கள்
புகைப்படங்கள்

Tags:

Updated: