அறிவிப்பு ——————–

25 /04 /2023 செவ்வாய்க்கிழமை கீழ்பவானி சீரமைப்பு வேலைகளை மே -1ஆம் தேதி தொடங்க கோரி பெருந்திரள் முறையீடு செய்வதாக அறிவித்திருந்தோம்.

சென்னையில் 20/04/2023ஆம் தேதி தலைமைச் செயலாளர் தலைமையில் ஈரோடு, திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் நீர்வளத்துறை மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்ட கூட்டத்தில் சீரமைப்பு வேலைகளை மே -1ஆம் தேதி தொடங்குவதற்கு முடிவு செய்து இருப்பதாக நீர்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம். திட்டமிட்டு இருந்த பெருந்திரள் முறையீட்டு போராட்டத்தை மாற்றி நீர்வளத்துறை அதிகாரிகளோடு 25/04/2023ஆம் தேதி வேலைகள் குறித்து கலந்து பேசிக்கொள்வது என முடிவு செய்து உள்ளோம்.

கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு.

கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் .

22/04/2023


கீழ் பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகளை உயர் நீதிமன்ற ஆணைப்படி தொடங்கக் கோரி ஈரோடு செயற்பொறியாளர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்!

கீழ்பவானிக் கால்வாய் சீரமைப்பு வேலைகளை அரசாணை எண் :276 இன் படி செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் தெளிவாக ஆணையிட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து ஆளும் கட்சியின் மாநில நிர்வாகியான கார்த்திகேய சிவ சேனாபதி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு வருகிறார்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி இன்று(25/04/2023) ஈரோடு செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன் மே-1ஆம்தேதி வேலைகள் தொடங்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது . உயர் நீதிமன்ற ஆணையை மதித்து மே-1ஆம் தேதி வேலையைத் தொடங்க தவறினால்…. மே -5ஆம்தேதி முதல் செயற்பொறியாளர் அலுவலக வளாகத்திற்குள் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும், காத்திருப்புப் போராட்டமும் ஆயிரக்கணக்கான விவசாயிகளை திரட்டி நடத்துவோம் என்றும் அறிவிக்கை செய்யப்பட்டது. பிறகு மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மே -1ஆம் தேதி வேலைகள் தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை கொண்ட மனுவை அளித்தோம் . வேலை தொடங்குவதற்கான அனைத்து ஆயத்த பணிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது என்று ஆட்சித் தலைவர் உறுதி அளித்தார்.

கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு

கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் 25/04/2023

புகைப்படங்கள்
புகைப்படங்கள்
புகைப்படங்கள்

Tags:

Updated: