ஆலோசனைக் கூட்ட முடிவுகள்:
கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பும் ,
கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து இன்று 9.4.2023 அன்று சிவகிரி கொங்கு திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில் பல்வேறு பாசன சபைகளின் நிர்வாகிகளும் ஆயக்கட்டு நில உரிமையாளர் சங்கத்தின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த M3பாசன சபையின் தலைவர் ஏ. இராமசாமி அவர்களுக்கும் L5 பாசன சபையின் செயலாளர் செங்கோட்டு வேலுமணி அவர்களுக்கும் கூட்டம் பாராட்டு தெரிவித்து சிறப்பித்தது. அத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது .
#கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1)உயர் நீதிமன்றம் கீழ் பவானி சீரமைப்பு வேலைகளை அரசாணை எண்: 276 இன் படி செய்ய ஆணையிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துமாறு ஈரோடு ,திருப்பூர் ,கரூர் மாவட்ட ஆட்சியர்களை கேட்டுக் கொள்வது.
2) ஏப்ரல் -25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஈரோடு செயற்பொறியாளர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற மே -1ஆம் தேதி சீரமைப்பு வேலைகளை தொடங்க வேண்டிஆயக்கட்டு விவசாயிகள் பெரும் திரளாக முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது