கீழ் பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகளை 2023 மே 1ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று இன்று ( 31/03/2023 )தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு ஆணை!
கீழ் பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகள் நீரியல் வல்லுனர்கள் குழுவால் தீர்மானிக்கப்பட்ட முறைப்படியான திட்டமாகும் . இந்தத் திட்டத்தில் நீதிமன்றம் தலையிடாது . அரசாணைப்படி வேலைகளை முழுமையாக செய்து கீழ் பவானி கால்வாயை பாதுகாக்க வேண்டும். என்று உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பு உரையில் தெளிவுபடுத்தி உள்ளது. இரண்டு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தடைபட்டிருந்த கீழ்பவானி சீரமைப்பு வேலைகளை தொடங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஆயக்கட்டு பாசன விவசாயிகள் அமைப்புகள் அனைத்தும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். மேலும் இந்த வேலைகளை தொடர்ந்து செயல்படுத்துவோம் என தமிழ்நாடு அரசும் குறிப்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்களும் திட்டத்தை நிறைவேற்ற உறுதியுடன் இருந்தார்கள். வீட்டு வசதி துறை அமைச்சர் மாண்புமிகு சு .முத்துசாமி அவர்கள் இணக்கமான முறையில் வேலைகளை எடுத்துச் செய்வதற்காக பல்வேறு கூட்டங்களை நடத்தியும் நேரில் ஆய்வு செய்தும் இடைவிடாது முயற்சிகளை எடுத்தார்.மாண்புமிகு அமைச்சர் சு முத்துசாமி அவர்களின் முயற்சியை திட்டமிட்டு சிலர் சீர்குலைத்த நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு அரசாணைப்படி வேலைகளை செய்ய வேண்டும் எனவழங்கப்பட்டுள்ளது . மாண்புமிகு அமைச்சர் சு. முத்துசாமி அவர்களின் ஒத்துழைப்போடும் இந்த பாசனப்பகுதியின் அமைச்சர்கள் மாண்புமிகு மு.பெ. சாமிநாதன் மாண்புமிகு செந்தில் பாலாஜி ஆகியவர்களின் ஆலோசனையையும் பெற்று கீழ் பவானி சீரமைப்பு வேலைகளை சிறப்புற செய்வதற்கு ஈரோடு ,திருப்பூர், கரூர் மாவட்ட நிர்வாகங்களும் நீர்வளத் துறையும் முன் வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இயல்பவனி சீரமைப்பு வேலைகளை செயல்படுத்த தொடர்ந்து முனைப்பு காட்டி வந்த தமிழக அரசுக்கும் இடைவிடாது திட்ட அறிக்கைகள் தயார் செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற அனைத்து நிறுவனத் துறை அதிகாரிகளுக்கும் நன்றி பாராட்டுகிறோம். கீழ் பவானிக் கால்வாய் சீரமைப்பு வேலைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்து 2020 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்ட அன்றைய முதல்வரும் இன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான திரு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் நன்றி பாராட்டுகிறோம்.
இப்படிக்கு,
இரா.ஈஸ்வரமூர்த்தி செயலாளர் இராமசாமி துணைத்தலைவர்
கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு
எஸ்.பெரியசாமி தலைவர்
கி.வே.பொன்னையன் செயலாளர்
கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம்.
சுப்பு மாவட்ட செயலாளர் தமிழக விவசாயிகள் சங்கம் 31/03/2023