பவானிசாகர் அணை

பவானி ஆறும், மோயாறும் கலக்கும் இடத்தில் 1956 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 105 அடி உயரமும் ~33 T.M.C கொள்ளளவும் கொண்ட அணை.

கீழ் பவானி திட்ட கால்வாய் (LBP Canal)

பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்படுள்ள பவானிசாகர் அணையிலிருந்து செல்லும் 124 மைல் நீளமுடைய பாசன வாய்க்கால். இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் பயன் பெறுகின்றன. இக்கால்வாயின் மூலம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கால்வாயின் தற்போதய நிலை

கீழ் பவானி திட்ட கால்வாய் 60 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணால் அமைக்கப்பட்ட கால்வாய். திட்டத்திற்கு பாசன விவசாயிகள் ரூபாய் 10 .33 கோடி வழங்கி உள்ளனர். தற்போதுகால்வாய் கரைகள் பழுதடைந்து நீர்க்கசிவு அதிகரித்துள்ளது. கரையில் உடைப்பு ஏற்படுகிறது .கடைமடை பகுதி விவசாயிகளுக்கு நீர் சென்று சேர்வதில்லை.

கால்வாய் வெட்டப்பட்ட போது, நிதி பற்றாக்குறை காரணமாக, இது மண் கால்வாயாக அமைக்கப்பட்டது, பல இடங்களில் கரையின் ஒரு பக்கம் மண் கொட்டப்பட்டு (Embankment Canal) அமைக்கப்பட்டது. இதன் காரணமாக ஆயக்கட்டு விவசாயிகளின் நீர் தேவையை கணக்கிடும்போது 33% கசிவு இருக்கும் என்று கணக்கிடப்பட்டது. இது தற்போது 55% க்கு மேலாக உள்ளது.

மேலும் சட்டவிரோதமாக நீரேற்று பாசனம் செய்து ஆயக்கட்டுக்கு வெளியே உள்ள பெரு விவசாயிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பலனடைந்து வருகின்றனர்.

கால்வாயின் தேவை

மேற்கண்ட பிரச்சினைகளால் நீர் நிர்வாகம் செய்வது கடினமானதால், அரசு மூத்த பொறியாளர் திரு.மோகனகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டது. அக்குழு கீழ் பவானி கால்வாய் நவீனமாக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை அதன் அறிக்கையில் பல ஆதாரங்களுடன் சுட்டி காட்டியுள்ளது.

அதன்படி கீழ் பவானி கால்வாயை நவீனப்படுத்த திட்டமிடப்பட்டு, நபார்டு வங்கி ஆய்வு செய்து, அதன் பயன் உணர்ந்து நிதி கொடுத்துதவ முன் வந்தது. 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் திணறிக்கொண்டுள்ளது.